''என்னை எதனால பிடிச்சிருக்கு? "
என்ன சொல்றது என்கிற தயக்கம் தங்கராசுக்கு!. பெண் பார்க்க வந்த இடத்தில் இப்படியெல்லாம் நடக்கும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. பெரியவர்கள் பேசி முடிப்பார்கள் என்று நினைத்து வந்தவனை இப்படி தனி அறையில் வைத்து அன்னம் இன்டர்வியு நடத்துவாள் என்பது தெரிந்திருந்தால் நாலு பேரிடம் ஆலோசனை கேட்டாவது வந்திருப்பான். வைத்த கண் வாங்காமல் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான்.
"எதனால என்னை பிடிச்சிருக்குன்னுதானே கேட்டேன்.எதுக்கு .இப்படி பிரமை பிடிச்ச மாதிரி இருக்கிங்க? பயமா?"
"அதல்லாம் இல்ல.அய்யா அம்மாவுக்கு உன்னை பிடிச்சிருக்கு ..அதான்.?"
"ஓ...அப்டியா? அவங்களுக்கு எது பிடிச்சாலும் உங்களுக்கும் பிடிச்சிருமா ? கழுதய கட்ட சொன்னாலும் கட்டுவிங்களா?"
"அப்படியெல்லாம் இல்ல..!"
"அப்ப சொல்லுங்க ..எதனால என்ன பிடிக்கும்? அழகா?"
"ம்ம்ம்!"
"உடம்பு?"
"என்ன இப்டி கேக்கிற?"
"உடம்பும் ஒரு அழகுதானே! உங்களை பார்த்தா பொம்பளையின் கண்ண பார்த்து பேசுற ஆளு மாதிரி தெரியலியே?"
"என்ன இப்டியெல்லாம் தப்புத்தப்பா பேசுறே?"
"த,,,,பார்றா! கட்டி அழும் போதும் கையும் துழாவுமாம்னு சொல்வாங்க.அந்த மாதிரி ஆளுதானே நீங்க?"
"என்ன அப்டியெல்லாம் எங்காத்தா எங்கய்யா வளக்கல!"
" அட உடு ராசா! உடச்சு சொல்றேன். நம்ம ரெண்டு பேருக்கும்தான் கல்யாணம். பரிசம் போட்டா பாதிப் பொண்டாட்டி ! எதுக்கு கூச்சம். ? கல்யாணம் ஆன நைட்ல என்னை சும்மா விட்ருவியாக்கும் ? மனச விட்டுப் பேசு மச்சான்.!"
"மொரட்டு பொம்பளையா இருக்கியே?"
"அதுவும் ஒரு சுகம்தான் மாமு !"
"என்ன மச்சான்.... மாமுன்னு மொறை வச்சு பேசுற??"
"என்னை தாலி கட்டி பொண்டாட்டியா வச்சுக்கப் போற ஆள் கிட்டதான் பேசறேன். சரி சொல்லுங்க.நான் எதுல அழகா இருக்கேன்?"
"மஞ்ச பூசுன முகத்த பிடிக்கிம்.!"
"கோயில்ல என்னை தொரத்திட்டுவந்து வம்பு பண்ணுன அந்த பயலுக்கு என் முகம்தான் பிடிச்சிருக்கும்னு நெனைக்கிறிங்களா? அவன் உங்க சேக்காலி யாமே?"
"அதுக்கும் இதுக்கும் முடிச்சு போடாதே!"
"அட கோபம் வருது?சரி ரொம்ப நேரமா பேசிட்டிருந்தா வெளியில இருக்கிறவங்க வேற மாதிரி நெனச்சிருவாங்க.பட்பட்னுபதில்சொல்லுங்க. உங்களுக்கு பால் குடிக்க பிடிக்குமா காப்பி பிடிக்குமா சாயா பிடிக்குமா?"
"பால்!"
"குளிக்கிறப்ப எனக்கு முதுகு தேச்சு விடுவிங்களா?"
"எனக்கு நீ தேச்சு விடுவியா?"
"அப்பாடா இது போதும் சார்! .தைரியம் வர்றதுக்கு இம்பிட்டு நேரமாயிருக்கு! மத்ததை கல்யாணம் முடிஞ்சதும் பேசிக்கலாம். இப்ப ஒரே ஒரு முத்தம் கொடுங்களேன்?"
"ஆளை விடு" என்று அவசரமுடன் கதவைத் திறக்க அவள் சிரிக்க வெளியில் இருந்தவர்களுக்கு சந்தோசம்.!
இருவரையும் சேர்த்து வைத்து விடவேண்டியதுதான்!
உண்மை நிகழ்வை அடிப்படையாகக்கொண்டு புனையப்படுகிற தொடர் .