"என்ன எதுக்கு சார் கூட்டிட்டு வந்திங்க.?"- இன்ஸ்பெக்டரை பார்த்துக் கேட்டான் தங்கராசு.
"பதறாதே.!சாமர்த்தியமா பண்ணிட்டதா நினச்சுட்டிங்கள்ல நீயும் உன் பிரண்டும்! அவன் போட்டுக்கொடுத்திட்டான். கொள்ளை அடிக்கிறது, பொம்பள கிட்ட போறது இதிலெல்லாம் கூட்டு சேரவே கூடாதுடா.! கூட்டாளி தப்பிச்சிடுவான் "
"சார்! வெளங்குறமாதிரி சொல்லுங்க! நான் என்ன தப்பு பண்ணினேன்?"
"உங்கப்பா வச்சிட்டிருந்தாரே செல்லத்தாயி. அவ மர்டர் கேஸ்ல அக்யூஸ்டு அவ புருசன் அடைக்கன் !. அவன காப்பாத்தி ஆந்திராவுக்கு அனுப்பினது நீயும் உன் நண்பன் வெள்ளிங்கிரியும்!அத உன் நண்பன் நேத்தே ஒத்துக்கிட்டு ரிட்டர்ன்ல எழுதிக் கொடுத்திட்டான்.நீ என்ன சொல்ற? எழுதிக் கொடுக்கிறியா இல்ல உள்ள போயி உக்கார்றியா?."
"............"
"என்னடா ..வாய்ல வரலியா? ஊமச்சாமியா? உனக்கு கல்யாணத்த பண்ணி வைக்காம இன்னொருத்தன் பொண்டாட்டி மேல உங்கப்பனுக்கு ஆசை!வப்பாட்டியா வச்சிருந்தா தாலி கட்டுனவன் என்ன பூபோட்டு கதவ சாத்தி வைப்பானா ? ரெண்டு பேரையும் சேத்து காலி பண்ணிருக்கணும். பொண்டாட்டிய மட்டும் போட்டுத் தள்ளிட்டான்.அவனுக்கு கல்யாணத்த பண்ணி வச்சு சேப்டியா ஆந்திராவுக்கு அனுப்பி வச்சிட்டிங்களே...ஒரு வகையில உங்கள பாராட்டணும்டா! என்ன சொல்றே ...எழுதுறியா ..பேப்பர் தரச்சொல்லவா?"
தங்கராசு தலையை ஆட்ட ரைட்டர் பேப்பர் கொடுத்தார்.
எழுதிக் கொடுத்து விட்டு வெளியில் செல்ல, அதே நேரத்தில் கைகளை பின்பக்கமா ஒரு துண்டில் கட்டி வெள்ளிங்கிரியை உள்ளே கொண்டு வந்தார்கள். அதை பார்த்தும் பார்க்காததுமாதிரி தங்கராசுகடந்தான்.
லா அண்ட் ஆர்டர், கிரைம் இரண்டு இன்ஸ்பெக்டர்களுக்கும் ஆச்சரியம்.
"என்னய்யா ..என்ன பண்ணினான்?" ---சட்டம் ஒழுங்கு காப்பாளர் ராம்குமார் நாற்காலியை விட்டு எழுந்து வந்தார். "கை கட்ட அவுத்து விடுய்யா"
"கோவில்ல மேல ஆடி வீதியில ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடந்திருக்கான்யா! எல்லாரும் சேந்து அடிச்சிருக்காங்க. கோவில் அவுட் போஸ்ட்ல வச்சிருந்து இங்க கொண்டு வந்திட்டோம்.நம்ம லிமிட்லதான் கோவில் இருக்கு"--ஏட்டய்யா சொல்லி முடிக்க,
"என்னடா இப்படி வந்து மாட்டுறே.கோவிலுக்கு சாமி கும்பிடத்தான் போவாய்ங்க. நீ டாவ் அடிக்கிறதுக்குன்னு போவியா? யார்ட்ட வம்பு பண்ணுனே?"
கன்னத்தில் விழுந்தது.... பளார் அறை!
"பராசக்தி படத்தில கருணாநிதி எழுதுன வசனத்த நெஜமாக்கிடுவாய்ங்க போலிருக்கே!அசந்தா கோவில்லேயே படுக்கைய போட்டு பர்ஸ்ட் நைட் நடத்திருவிங்க .இல்லடா ?" --இன்னொரு அறை!
வெள்ளிங்கிரி வாயை திறக்கவில்லை. அடி வாங்கிக் கொண்டு நிற்கிறான்.
"செனப்பன்னி மாதிரி இருக்கேல்ல..அதான் தெனவெடுத்து எவ சிக்குவான்னு அலையிறே? அதான் உங்கள மாதிரி திமிர் பிடிச்சவய்ங்களுக்காக சில சிறுக்கிக திரியிறாளுகளே...அவள்கல்ல எவள்ட்டாயாவது போயி திமிரை காட்டவேண்டியதுதானே? சீக்கு வந்திரும்னு பயம்!"
அவன் பதிலேதும் சொல்லாமல் அத்தனை அடிகளையும் வாங்கிக் கொண்டான்.
ராம்குமார் அடித்து துவைத்து விட்டார். வெள்ளிங்கிரியை இழுத்துக் கொண்டு போய் லாக் அப்பில் தள்ளினார்கள்.அந்த அளவுக்கு போலீஸ் அடி!
உண்மை நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு புனையப்படும் கற்பனை தொடர்.