டீ யை குடித்து விட்டு தம் பற்ற வைத்தார் விளக்குத்தூண் குற்றப் பிரிவு இன்ஸ்.ராசதுரை.
லாக் அப்பில் நாலைந்து பேர் கிடந்தார்கள். இரவு நேர களவாணிகள்
.சுடுதண்ணீர் பாய்லர், அண்டா, குண்டா, குடம் என செம்பு பித்தளை பாத்திர வகையறாக்களை களவாடுவதில் கில்லாடிகள். லாக் அப்புக்கு வெளியில் எஸ்.ஐ.டி.கேஸ்பெண்கள். இருளில் மறைந்து கொண்டு ஆண்களை விபசாரத்துக்கு அழைத்தார்கள் என்று சொல்லி அவர்களை பற்றி கேஸ் எழுதுவார்கள்.மாஜிஸ்திரேட்டிடம் ஒப்புக்கொண்டு தண்டிக்கப்பட்டாலும் அவர்களை ஜாமீனில் கொண்டு வருவதற்கு ஆட்கள் தயாராக இருப்பதால் அந்த மாதிரியான பெண்கள் போலீசுக்கு அவ்வளவாக பயப்படுவதில்லை. பிரியாணி, வெத்திலை, பாக்கு, புகையிலை என தாராளமாக ஸ்டேஷனின் புழங்கும். ஒரு வகையில் கவுரவ விருந்தாளிகள்தான்!
' ஏண்டி நாகு...ஒரு ராத்திரியில் எத்தனை கிராக்கிய சமாளிப்ப?"--பக்கத்தில் இருந்த கோடாலி கொண்டைக்காரியிடம் ஒருத்திகேட்டாள்.
"அத ஏன் கேக்கிற. மூணு பேரை தாங்குறதே எம்பாடு உம்பாடுன்னு ஆயிரும். கஞ்சாவை இழுத்துட்டு வர்ற சண்டியர்கள சமாளிக்கிறதுக்குத் தான் மூச்சு வாங்கும். நாசமா போவாய்ங்க குறுக்க ஓடிச்சிருவாய்ங்க.அசந்திட்டம்னு வையி.சுருக்குப் பை காசையும் லாவிட்டு போயிருவாய்ங்க. நாய் பொழப்புதான்.இதில இவிய்ங்களுக்கு காசும் கொடுக்கணும்.கேசும் கொடுக்கணும்."என்று பதில் சொன்னவள் போலீஸ் புள்ளிகளையும் விட்டு வைக்க வில்லை.
"கேஸ் போடுறதோடு விட்டா பரவாயில்லையே..புதுசா வர்றவளுகளையும் இவிய்ங்கதான் போணி பண்ணுவாய்ங்களாம். ஒருத்தன் ரெண்டு பேர்னா சகிச்சுக்கலாம்.மொத்த டேசனும் வந்திருவாய்ங்கடி....குடிக்கி!" -அவள் அசிங்கமாக சொல்வதையும் காதில் விழாததுபோல போலீஸ்காரர்கள் கேட்டுக் கொள்வதுதான் ராஜதந்திரம்..அவளுகளை விட கேவலமான பிறவிகள் அவர்கள்தான்.விபசாரிகளுக்கு அதுதான் பிழைப்பு.சர்க்காரிடம் சம்பளம் வாங்கிக்கொண்டு சவடாலாக திரிகிற போலீஸ்காரர்களுக்கு என்ன கேடு.உடம்பை விற்பவள்களிடம் ஓசியில்....ச்சே!
எதையுமே கண்டு கொள்ளவில்லை ராசதுரை! அன்னம் கேசை எப்படி முடிப்பது என்பது அவரது கவலை..
"ஐய்யா...?" கைகளை கட்டிக்கொண்டு குனிந்து கும்பிட்டான் வெள்ளிங்கிரி.
"என்னலே?"-எகத்தாளமாக பார்த்தார் இன்ஸ்.
"குத்தத்தை ஒத்துக்கறன்யா.!"
" நெசமாத்தான் சொல்றியா? கோர்ட்டுல போயி அடிக்குப் பயந்து சொன்னதா மாத்திடமாட்டியே? காசுக்காரப் பயடா நீ. எப்படி வேணும்னாலும் பல்டி அடிப்பே! வெளியே போயிட்டா அப்பறம் நாங்கள்லடி நாக்க தொங்க விட்டுக்கிட்டு உன் பின்னாடி திரியனும்.?"
"எங்காத்தா மேல சத்யம் ஐய்யா.!மாற மாட்டேன்.மாறுனா கொன்னே போட்டுருங்க.அந்த அன்னம் புள்ள மேல எனக்கு ஒரு நோக்கம் இருந்துச்சு . அதான் அது பின்னாலேயே திரிஞ்சேன். மடியிற மாதிரி தெரியல. கோயில்ல வச்சு சத்யம் பண்ண வச்சிரலாம்னுதான் அப்படி நடந்துக்கிட்டேன். மத்தபடி நான் அந்த புள்ளைய பத்தி சொன்னதெல்லாம் பொய்தான்.அந்த புள்ள என்ன விரும்பலே."
"இத முதல்லையே சொல்லிருந்தா இவ்வளவு அடி தின்னுருக்க மாட்டேல்ல.!" என்ற ராசதுரை ரைட்டரை கூப்பிட்டு அவன் சொன்னதை அப்படியே வாக்குமூலமாக எழுதிக்கொள்ள சொன்னார். அவரும் எழுதி முடித்தார்.
"ஜாமீனுக்கு ஆள் இருக்கா?"
"போன் பண்ணினா வந்திருவாங்க.!"
"சரி..எட்டய்யாகிட்ட சொல்லு. அவர் பேசுவாரு!"
அடிபட்ட வன்மம் நெஞ்சுக்குள் நெருப்புத் துண்டுகளாக கிடக்க வெள்ளிங்கிரி வெளியேறுகிறான்.
"இனிமே உங்க கையில நான் மாட்டமாட்டேண்டா!"

No comments:
Post a Comment