பாபு என்றால் யாருக்கும் தெரியாது. சிங்காரவேலன் காம்பவுண்டு ஆட்களும் தடுமாறித்தான் போவார்கள். வாஷிங் மெஷின் என்று சொன்னால்போதும் பச்சா வாண்டுகளும் கைப்பிடித்து கரெக்டாக வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டு விடுவார்கள். ஆர்.கே.நகரில் குக்கரை விட வாஷிங் மெஷின்தான் பேமஸ். பாபு சிறிய அளவில் சலவைக் கம்பெனி நடத்துகிறான்.
மெயின் தொழில் சலவை செய்வது கிளைத் தொழில் ரசிகர் மன்றம்.ராஜேஷ் காந்தின் தீவிர ரசிகன்.அவரது படம் வெளிவரும் நாளன்று எல்லோருக்கும் இலவசமாக சட்டை மட்டும் அயர்ன் பண்ணித் தருவான். அப்படி ஒரு நாளில்தான் ஷீலா அவனுக்கு அறிமுகமாகிறாள்.
" இந்த பிளவுசை அயர்ன் பண்ணிக் கொடுங்க!" என்று காட்டன் பிளவுசை கடைப்பையனிடம் ஷீலா கொடுக்க கடைக்குள் பாபு வேறு வேலைகளில் இருந்தான்.அவளைக் கவனிக்கவில்லை.
"இருபது ரூபா கொடுங்க!" கடைப்பையன் கேட்டான்.
" இன்னிக்கி தலைவர் படம் ரிலிஸ் பா! சர்ட் , பிளவுஸ்க்கு பிரீ அயர்னு சொன்னாங்களே?"
"அது ஜென்ட்ஸ்க்கு மட்டும்தான்.லேடீஸ்க்கு இல்ல?"
"ஏன் நாங்க பேன்ஸ்சா இருக்கமாட்டமா..மகளிர் அணிதான்பா தலைவர்க்கு சக்சஸ் கொடுக்கிற அணி.!நாங்களும் விசில் அடிப்போம்.குத்தாட்டம் போடுவோம்.போட்டா பசங்களே மெர்சல் ஆகிடுவானுங்க.தெரியும்ல."
"என்னத்த போடுவீங்க பீரா பிராந்தியா?"
"என்ன நெக்கலா...? மவனே நாறிடுவே!"என்ற ஷீலா கடையில் இருந்த விளம்பர போர்டை ஆத்திரமுடன் தள்ளிவிட,கடைப்பையனுக்கு கோபம்!
"இந்த வெட்டி வெவகாரம்லாம் இங்க வேணாம்.வேறெங்கேயாவது போயி வெச்சுக்க"என்றபடியே பிளவுசை வீசி ஏறிய அது கடைக்கு வந்த ரசிகனின் முகத்தில் போய் விழுந்தது.அவனும் கலாய்ப்பதில் கில்லாடி. ரசிகர் மன்றத்தலைவரின் கடையில் ஒருத்தி ரகளை செய்கிறாள் என்றால் அவன் எப்படி சும்மா இருப்பான்?
"என்னடா இப்படி கப்படிக்கிது. பாடி ஸ்பிரே, பெர்ப்யூம்லாம் அடிக்க மாட்டா ளுக போலிருக்கே? " என்று அவனும் தூக்கி வீச தரையில் விழுகிறது பிளவுஸ்.
ஷீலாவுக்கு செம கோபம். மொத்த தொண்டையையும் திறந்து கத்துகிறாள்.
"காட்டுப்பயல்களே!கம்மினாட்டிகளா...ப்ரீயா அயர்ன் பண்ணுவோம்னு சொல்லி ஏமாத்துறாய்ங்க.தலைவர் பேரை சொல்லி டிக்கெட் வாங்கி வித்து காசு சேக்கிற பிராடு பயலுக."என்கிறபோதே கூட்டம் சேர்ந்து விட்டது. பதட்டமுடன் கடையை விட்டு வெளியில் வந்த பாபு "என்னம்மா என்ன பிரச்னை பண்ற?"என்றான். டி சர்ட்டில் தலைவர் ராஜேஷ் காந்த் படம்.
"யார்யா பிரச்னை பண்றது? ஆம்பளன்னா ப்ரீ பொம்பளன்னா காசுன்னு கேக்கிற கசமாலம்லாம் தலைவருக்கு விழா கொண்டாடுனா வெளங்குமா? முடியாதுன்னா மரியாதையா பிளவுஸ கைல கொடுக்க வேண்டியதுதானே ..அந்த நாதாரி ஏன்யா தரைய்ல தூக்கி வீசுனான்? இன்னொருத்தனுக்கு 'கப்' அடிக்கிதாம்.மழை பேஞ்சாதான் குளிப்பான் போலிருக்கு!அந்த வெங்காயம் சொல்றான் பெர்ப்யும் அடிக்கலியாம்! சாணிப்பய!"
"தா...தா. நிறுத்தும்மா ..அடிக்கிட்டே போறே? லேடீஸ்க்கு பிளவுஸ் தேச்சுக்கொடுக்கிறதில எங்களுக்கு நஷ்டம் வந்திறப்போறதில்ல. ஆனா அவங்க வீட்டுல அத விரும்ப மாட்டாங்க.அதுலயும் இப்ப யாரும்மா பிளவுஸ் போடுரா? "
"யோவ்?"
"சுடிதார்னு சொல்ல வந்தேன்மா!ஒரு சுடிதார் அயர்ன் பண்றதுக்குள்ள நாலு சட்டை அயர்ன் பண்ணிடுவோம்.இப்ப புரியிதா?"
''இந்த ஈர வெங்காயத்த அப்பவே சொல்லிருக்கலாம்ல?"
"தப்புத்தான்.அந்த பையனை அடக்கி வைக்கிறேன்.அவனைத்தான் அடக்க முடியும்!"
"அப்ப என்னை அடக்க என் புருசன் வருவான்னு இன்டைரக்டா சொல்றியா?"
"அப்படி சொல்லலம்மா..வம்பு இழுக்காதே ..மன்னிச்சிடு"
"அது!" என்றபடியே அங்கிருந்து கிளம்பினாள் ஷீலா,
-----இன்னும் வரும்.