

எல்லாம் முன் எச்சரிக்கையாம்! அதான் அலர்ட்டா இருக்காங்களாம்.!
இப்படி முன் எச்சரிக்கை முனிம்மாக்கள் நிறைஞ்ச ஊர்ல நம்ம ஊரு லாரன்ஸ் மாஸ்டரை பத்தி கலவரமான செய்தி.
பிழைக்கப்போன ஆந்திராவ்ல இவருக்கும் நடிகை கேத்தரின் தெரசாவுக்கும் விவகாரம். அந்த பெண்ணை டிஸ்மிஸ் பண்ணிட்டார்னு ஒரே பேச்சு!
விவரம் என்ன..விரிவா பார்ப்போம்.
தெலுங்கு மேக ஸ்டார் சிரஞ்சீவியின் 150 வைத்து படம்தான் கைதி நம்பர் 150. இதில ஒரு அயிட்டம் டான்ஸ். பெரிய நடிகை குத்தாட்டம் போட்டால் படத்துக்கு சிறப்பா இருக்கும்னு படத்தின் தயாரிப்பாளர் ராம் சரண் நினைக்க சிரஞ்சீவி ஓகே சொல்லிவிட்டார்.
பிரமாண்டமான படம் என்பதால் மகள் சுஷ்மிதாவை காஸ்ட்யூம் டிசைனர் ஆக நியமித்திருந்தார்கள். . இவர் வடிவமைத்த காஸ்டியூம் சரியா இல்லேன்னு கேத்தரின் கேவலமாக பேச பிரச்னை வெடிச்சிருக்கு. இதுக்கும் லாரன்ஸ் மாஸ்டருக்கும் எந்தவிதமான சம்பந்தமும் கிடையாது. கேத்தரின் சும்மாவே சுஷ்மிதாவை வேலைக்காரி மாதிரிதான் பேசுவாராம். தயாரிப்பாளர் ராம்சரணின் தங்கச்சி, ஹீரோ சிரஞ்சீவியின் மகள் என்கிற மரியாதை கூட இல்லாமல் கேத்தரின் பேசினால் சகோதரனுக்கு கோபம் வருமா வராதா?
"மாஸ்டர்...வேற ஆளை வச்சு அயிட்டம் டான்சை எடுங்க" என்பது மேலிடத்து உத்தரவு.
லாரன்ஸ் மாஸ்டருக்கு வேண்டிய நடிகை ராய் லட்சுமி!
கவர்ச்சி களைகட்டி கம்பீரமாக நிக்கிது.
இதுதான் உண்மையில் நடந்தது என்றாலும் கோலிவுட்டில் மாஸ்டர்தான் காரணம் என்று சொல்லி பார்ட்டி கொடுக்கிறார்கள்.
எதுக்காக பார்ட்டி என்கிற விவஸ்தை வேணாமா சாரு?
No comments:
Post a Comment