"என்னங்க.....அதான் தீவாளி முடிஞ்சிருச்சுள்ள...என்னிக்கி ஊருக்கு?"
"என்னடி ..நீயே இப்படி கேக்கிறே? நாம்ப என்ன டேரா போடுறதுக்கா வந்திருக்கோம்..உங்க அம்மா இப்படி கேக்க சொன்னாங்களா? இருக்காதே என் மாமியா ரொம்பவும் நல்லவங்களாச்சே? உனக்கு என்னடி பிரச்னை? வீட்டுக்கு கெளம்புறதிலேயே இருக்கே?"
"என் தம்பி காலம்பர இருந்தே தீவாளி தமிழர் பண்டிகை இல்ல.திருமலை நாயக்கர் காலத்திலேயே எறக்குமதி பண்ணுன பண்டிகை.இதை சாக்கா வச்சுக்கிட்டு என்னென்னமோ பண்றாங்க.புது டிரஸ்,தலை தீவாளி,வகை வகையா ஸ்வீட்ஸ்னு வெட்டி செலவுன்னு போன்ல பேசிட்டிருந்தான். எனக்கு ஒரு மாதிரியா இருக்கு.தலைமுறை தலைமுறையா தலை தீவாளிக்கு புது மாப்பிள்ளை பொண்ணை கூட்டி வந்து மாமியார் வீட்டுல விருந்து உபசாரமெல்லாம் நடக்கிறதுதானே?"
"உன் தம்பி தமிழ் படிச்சவன்.அதான் நெஜத்த சொல்றான். ஆனா காலம் காலமா இருக்கிற இதை மாத்த முடியாது. நாளைக்கு கல்யாணம் நடந்து அவன் தலை தீவாளிக்கு மாமனார் வீட்டுக்கு போவான் பாரு. அப்ப தெரியும்.அவன் வேணாம்னு சொன்னாலும் பெண்டாட்டி சும்மா இருக்க மாட்டா.சண்டைய இழுத்திடுவா?"
"என்ன தீவாளி நம்ம பண்டிகை இல்லையா?"
"நெஜம்தான்! மதுரையை ஆண்ட நாயக்கர் நெறைய மாறுதலை செஞ்சிட்டு போயிட்டார்.திருமலை நாயக்கருக்கு முன்பு மீனாட்சியம்மன் திருக்கல்யாணம் தேரோட்டம் மாசி மாதம்தான் நடந்திருக்கு.இதை சித்திரை மாதத்துக்கு மாத்தி நடத்தினார்.மன்னர் சொல்லை யாராவது மீற முடியுமா? நரகாசுரன் கதைக்கும் தீவாளிக்கும் சம்பந்தமே இல்லை.மதுரை நாயக்கர்களாலும்,செஞ்சி,தஞ்சை நாயக்கர்களாலும் புகுத்தப்படதுதான் தீவாளி. தீபம்னா விளக்கு, ஆவலின்னா தொடர்ச்சி, ஒழுங்குன்னு அர்த்தம். தொடர்ச்சியா விளக்கு ஏத்தி வழிபாடு நடத்துறது..இதான் தீபாவலி. இதுதான் தீபாவளின்னு புழக்கத்துக்கு வந்திருக்கு. நியாயமா பாத்தா இது சமணர்கள் கொண்டாடிவந்த விழான்னு பேராசிரியர் அ.கி.பரந்தாமனார் எழுதிய 'மதுரை நாயக்கர் வரலாறு' என்கிற ஆராய்ச்சி புத்தகத்தில் தெளிவா சொல்லிருக்கார்.. அதனால உன் தம்பி சொன்னதில் தப்பே இல்லை. அதுக்காக நாம்ப உடனே ஊருக்கு கெளம்பனும்கிறது அவசியமில்ல."
"என் தம்பி என்ன அர்த்தத்தில சொன்னானோ ....அதெல்லாம் தெரியாது. நான் சொல்றேன் இன்னிக்கி கெளம்பியாகனும்" என்று சொல்லி முடிக்க அடுப்பங்கரையில் இருந்து அம்மாவின் அழைப்பு.
"மாப்ள கிட்ட என்னடி வம்படிக்கிறே....வா மிளகா அரைச்சு கொடு! வெரா மீனுக்கு மிளகாயை அரச்சு
ப் போட்டாதான் ருசியா இருக்கும். வா"
இதை கேட்ட பின்னரும் அவன் ஊருக்கு கிளம்புவானா?

No comments:
Post a Comment