ஸ்டேசனையே அதிர வைத்து விட்டான் தங்கராசு. அவனை அடித்துக் கொல்லப் பார்க்கிறார்கள் என்று நினைக்கும் அளவுக்கு கத்தல் இருந்தது. இன்ஸ்பெக்டர் அந்த நிமிடம் ஆடிப்போய்விட்டார் என்றே சொல்லலாம்.
"ஏ....ய்.! என்னப்பா நீ இந்த கத்து கத்துறே! தெருவில போறவய்ங்க காதில கீதில விழுந்தா பொல்லாப்பு ஆயிடும்பா! ஸ்டேசன்ல யாரையோ அடிச்சு நொறுக்குராய்ங்கன்னு கட்சிக்காரப் பயலுக கொடிய தூக்கிட்டு வந்திருவாய்ங்க! இப்ப என்ன சொல்லிட்டேன்னு இந்த கத்து கத்துனே? அந்த புள்ள தற்கொலை பண்ணிக்கல.யாரோ கொன்னு தொங்க விட்டிருக்காய்ங்க. அது விசயமா கேட்கிறதுக்குத்தான் உன்னை கூட்டிட்டு வந்தேன். இப்ப சொல்லு ! உனக்கு யார் மேலயாவது சந்தேகம் இருக்கா?" இன்ஸ்பெக்டர் ராஜதுரை அவனை ஆசுவாசப்படித்தியபடி கேட்டார்.
குழம்பிய மன நிலையில் இருந்தான் ராஜதுரை. அவனுக்கு தெரிந்தவரை அவர்களுடைய காதலுக்கு யாருமே எதிரி இல்லை.பொன்னியின் அப்பாவுக்கு பிடிக்கவில்லை.அதனால் மகளுடன் சண்டை போட்டார்.அருவாமனை வெட்டு விழுந்தது.ஆஸ்பத்திரிக்கு அவரை கொண்டு போய் விட்டார்கள். மகளை கொல்லுகிற அளவுக்கு மோசமானவர் இல்லை.பொன்னியை யார் கொலை செய்திருக்க முடியும்? சம்பவம் நடந்த போது அந்த இடத்தில்வேறு யாருமே இல்லை என்பது அவனுக்கு தெரியும்.
இருட்டுக்குகையில் அவனை கட்டிப்போட்டது மாதிரி இருந்தது.
"எனக்கு எதுவும் புலப்படலையா! அப்படி யாராவது எதிரி இருந்திருந்தா பொன்னி கண்டிப்பா என்னிடம் சொல்லிருக்கும். அது எங்கிட்ட எதையுமே மறைச்சதில்ல!"
"போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்படி அந்த புள்ளைய வாயைப் பொத்தி மூச்சு திணற வச்சு கொன்னுருக்காய்ங்க. செத்த பிறகு தூக்கில தொங்க விட்டிருக்காய்ங்க.நிச்சயமா யாரோ ஒரு ஆம்பளைதான் செஞ்சிருக்க முடியும்.அந்த புள்ளையும் போராடி பார்த்திருக்கு.அந்த ரூம் கிடந்த நிலையை பார்த்தபோதே எனக்கு சந்தேகம்தான்! பீரோ வேற நகர்ந்து கெடந்துச்சு.யாரோ ஒளிஞ்சிருந்து இந்த காரியத்தை பண்ணிருக்கான். பொன்னிய கொல்றதுதான் அவனது நோக்கமா இருந்திருக்கும்!"
"அய்யா ...நீங்க சொல்றத பார்த்தா ரொம்ப நாளா யாரோ ஒருத்தன் எங்களை நோட்டம் பார்த்திருக்கான்னு தெரியிது."
"உங்களுக்கு தெரிஞ்ச பயலுகள்ல யாரோ ஒருத்தன்தான் இத செஞ்சிருப்பான். யார் மேலயாவது உனக்கு சந்தேகம் இருக்கா? இப்ப யோசிச்சு பாரு?"
யார் மீதும் தங்கராசுக்கு சந்தேகம் வரவில்லை.யாரை சொல்வது, யாரை நோவது?பொன்னியும் அவனிடம் எதுவும் சொன்னதில்லை.
"எனக்கு தெரியலய்யா!பொன்னியின்அய்யாஅம்மாகிட்டகேட்டுப் பாருங்க ..அவங்க சைடுல யாராவது பொண்ணு கேட்டு வந்து பிரச்னை எதுவும் நடந்ததான்னு தெரியல.!"
"இந்த எழவத்தாண்டா இன்னமும் கட்டிக்கிட்டு திரியிறிங்க. பொண்ணு கொடுக்கலேன்னா பொத்திக்கிட்டு போறதில்ல.அவளத்தான் கட்டுவேன். இல்லேன்னா கொல்வேன்னு அலையிறிங்க. அவ கிட்ட இருக்கிறதுதானே மத்தவ கிட்டேயும் இருக்கு.அங்கென்ன தங்கத்திலையா கிடக்கு?"
தங்கராசுக்கு அவர் பேசியது பிடிக்கவில்லை. அவனால் அதை எதிர்த்துப் பேசவும் முடியாது.அவருக்கு எதுவும் துப்பு கிடைக்கவில்லை என்கிற கடுப்பில் பேசுகிறார்.தலை குனிந்தபடி கேட்டுக்கொண்டான்.
"யோவ்.! அவ அப்பன் ஆத்தாவாவது உண்மைய சொல்லுவாங்களா...போன புள்ள திரும்பி உசிரோடு வரவா போகுதுன்னு குத்தவாளிய மறச்சிருவாய்ங்களா...ஆம்பள பொம்பளன்னு பார்க்க மாட்டேன்.லத்திக்கம்ப எடுத்தேன்னா ஒன்னு எலும்பு முறியும்.இல்லீன்னா கம்பு உடையும்.போய்யா... சொல்லி வை அந்தாளுகிட்ட!"
எரிச்சலுடன் தங்கராசுவை அனுப்பி வைத்தார் இன்ஸ்பெக்டர் ராஜதுரை.
தங்கராசு கிளம்பி சென்றபிறகு ஃபாரன்சிக் அதிகாரி வந்தார். "முக்கியமான எவிடென்ஸ் ஒன்னு பொன்னியின் ரூமை செர்ச் பண்ணினபோது கிடைச்சது மிஸ்டர் ராஜதுரை" என்று சொன்னவர் ஒரு பொட்டலத்தை கொடுத்தார்.
பிரித்துப் பார்த்தார் ராஜதுரை.முகம் அதிர்ச்சியை காட்டியது.
"என்ன சார் இது? அந்த பொன்னி ரொம்பவும் நல்ல பொண்ணுன்னுதான் எல்லா பயலும் சொல்றாய்ங்க.இது எப்படி அந்த பொண்ணு ரூம்ல ?"
"கொலை பண்ண வந்த பய வச்சிருந்திருக்கலாம்ல?"
அந்த பொட்டலத்தில் அப்படி என்னதான் இருந்தது.நிரோத் பாக்கெட் !
உண்மை நிகழ்வை அடிப்படையாக வைத்து புனையப்படுகிற தொடர்.

No comments:
Post a Comment