
இப்ப டிரண்டில் இருப்பது சசிகலாதான். ஜெயலலிதா இல்லாத எடத்தை இந்த அம்மாதான் பில் அப் பண்ணப்போறாங்கன்னு ஊரு உலகமே பேசிக்கிட்டு இருக்கு.! அதனால சசிகலா பேரை தனது அடுத்த படத்துக்கு வைக்கப்
போறாராம்.
"இது சுத்தமான காதல் படம்"னு சொன்னதுடன் விட்டிருந்தால் கவலைப்பட்டிருக்க மாட்டோம். 'தமிழனின் காதல் கதைன்னு " சொல்லி இருப்பதுதான் கவலையா இருக்கு! உண்மையை சொல்றோம்னு வீரப்பனை கந்தல் கந்தலாக காட்டுன பெரிய மனுசந்தான் இவரு!
தனக்கு ஜெயலலிதாஜி மேல மதிப்பு மரியாதை இருந்தாலும் அதை விட மிக உயர்வான மதிப்பு மரியாதை சசிகலாஜி மேல இருப்பதாக சொல்லி இருக்கிறார். நல்ல காலம் ஜெயலலிதா மேல பக்தியா இருந்த விசுவாசிகள் இப்ப தோழி பக்கம் மாறி விட்டதால் யாரும் கண்டிக்கப் போறதில்ல.
சசிகலாவின் கண்கள் வழியாக ஜெயலலிதாவை பார்க்கப்போகிறாராம்.
சிங்கம் இருந்த காட்டில் சிறுநரி ஊளை இடுவதால் காடு அதிரவா போகுது. ராம்கோபால் ஜி உங்களுக்கு தமிழ்நாடு அரசு விருது கிடைச்சாலும் அதிசயமில்ல. ஆடுங்க!
No comments:
Post a Comment