வணக்கம்,
இரண்டு நாளைக்கு முன்னர்தான் கொன்னவாயன் சொல்லி இருந்தார் கேப்டனின் ஜாய்ஸ் வைகோதான் என்பதாக!
அதுதான் சரியாகவும் வந்திருக்கிறது. என்ன, விஜயகாந்தை முதல்வர் வேட்பாளராகவும் அறிவிக்கவேண்டிய கட்டாயம் மக்கள் நலக் கூட்டணிக்கு ஏற்பட்டிருக்கிறது.அதுதான் அவர்களுக்கு ஒரு சறுக்கல். மக்கள் நலக்கூட்டணியின் பொதுவான கருத்துகளுக்கும் கேப்டனின் தேர்தல் கொள்கைகளும் ஒற்றுமை -வேற்றுமை எவை எவை என இரு தரப்பும் விளக்குமா?
பொதுவான எதிரி அம்மா திமுகதான் ( இனி எதிர்வரும் காலத்தில் இப்படித்தான் இருக்கும் என்பது குரங்காரின் கருத்து.) என்கிறார்கள்.லஞ்சம் உழல் தான் அவர்களது குற்றச்சாட்டில் முக்கிய கருத்து. எதிர்வரும் காலத்தில் அத்தகைய ஊழல்கள்,கைஊட்டுகள் நிகழாது என்பதற்கு உறுதியான வழிகள் எதுவும் சொல்லப்படவில்லை. தற்போதைய உடன்பாடு கூட அதை வலியுறுத்துவதாகவும் இல்லை.தொகுதிகள் நூற்றி இருபத்தி நான்கும் ,முதலமைச்சர் பதவியும் தே.மு.தி.க.வுக்கு மட்டுமே என சொல்லப்பட்டு இனி 'விஜயகாந்த் அணி என்றே அழைக்கப்படும் என்பதாகவும் வைகோ அதே மேடையில் தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த்,வைகோ,தொல்,.திருமாவளவன்,முத்தரசன், ராமகிருஷ்ணன் ஆகிய ஐவர் மட்டுமே இனி தீர்மானிக்கும் சக்திகள்.இவர்களில் தர்மராக கேப்டனும் அர்ச்சுனனாக வைகோவும், வீமனாக தொல்.திருமாவும் வர்ணிக்கப்பட்டிருக்கிறார்கள் வைகோவினால்!
மக்களுக்குள்ள ஐயம் எல்லாம் வைகோவை விட கேப்டன் முதல்வர் பதவிக்கு தகுதியானவர்தானா என்பதுதான்!உலக அரசியல் உள்ளூர் அரசியல் பேச்சாற்றல்.நிர்வாகத்திறமை நிதானம்,மத்திய அரசுடன் போராடும் வியுகம் இன்னும் பலவற்றில் வைகோவை விட கேப்டன் எந்த அளவுக்கு சரியாக இருப்பார்? ஊழலால் சீர்கெட்டிருக்கும் தமிழகத்தை மீட்டெடுக்கும் திண்மை வழிமுறை, குடும்ப தலையீடு இல்லாமல் இருக்குமா?
தெளிவாக்குவார்களா? குடும்ப அரசியல் இல்லாமல் நடக்குமா?
கடவுளே ,எமை காப்பாற்றும்!
.

No comments:
Post a Comment