" ஏய், குரங்கே....எத்தனை பேரு உன்னை ஏப்ரல் முட்டாளாக்கினாங்க?"
குரங்குன்னா அவ்வளவு கேவலமாகிப் போச்சு! அந்த ஆளு என்னை ரொம்பவும் இன்சல்ட் பண்ணினாலும் மனதுக்குள் " இருடா எனக்கும் ஒரு நேரம் வரும்"னு நினைத்துக்கொண்டு பதில் சொன்னேன்.
"மொத்த தமிழ்நாட்டில எத்தனை கோடி முட்டாளுங்க இருப்போம்கிறது மே மாதம் பத்தொன்பதாம் தேதி தெரியப் போகுது... இப்போது ஏன் ஓய் அவசரம்?" என்றேன் ,
" உன் புத்திய காட்டிட்டில்ல! அதென்ன மே 19?"
"அன்னிக்கித்தானே எலக்சன் ரிசல்ட். நான் நினைச்ச கட்சி தோத்துப் போச்சுன்னா நான் முட்டாள். நீ நினைச்ச கட்சி ஆட்சிக்கு வரலின்னா நீ முட்டாள்.இப்படி நாடு முழுக்க முட்டாளுங்க இருப்பாங்கள்ல! அதத்தான் சொன்னேன்."
"இதுக்குத்தான் குரங்குபுத்தின்னு பேரு! நான் கேட்டது ஏப்ரல் முட்டாளுங்களை பத்தி!"
"யப்பா.. என்னை யாரும் ஏப்ரல் முட்டாளாக்கல.நானும் அந்த மாதிரி செய்யல. அது உங்களுக்கு மட்டுமே தெரியும்! இந்த ஏப்ரல் முட்டாள் தினம் கொண்டாடுறாங்களே ,அதன் அசல் வித்து எந்த நாடுன்னு தெரியல.காரணம் என்னங்கிறதும் தெரியல. எட்டாம் நூற்றாண்டிலிருந்து பதினாலாவது ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில்தான் வந்திருக்கணும்னு ஆராய்ச்சி பண்றவங்க சொல்றாங்க." என்றேன்.
"கேப்டன் பேசுற மாதிரி இருக்கு. நீ சொல்றது? தெளிவா சொல்லு குரங்கே?"
"உனக்கு புரிஞ்சிக்கிற கபாசிட்டி கம்மியா இருக்கிறதால நான் உன் மண்டைய சொறியனுமா? இருந்தாலும் கேட்டுட்டே. சொல்றேன்..பருவகால மாற்றம், புதிய காலண்டர் நாள் இவைகளின் அடிப்படையில்தான் முட்டாள் தினம் வந்திருக்கணும்னு சொல்றாங்க. 1582-ம் வருசம் ஐரோப்பாவில் புதிய போப்பாண்டவர் கிரிகோரி அதுவரை புத்தாண்டு தினமாக கொண்டாடப்பட்ட ஏப்ரல் ஒன்னாம் தேதியை ஜனவரிக்கு மாத்தினாராம். இதை அறியாதவர்கள் ஏப்ரலி ல் புத்தாண்டு கொண்டாட அதை மற்றவர்கள் முட்டாள்கள்னு கேலி செய்ததால் முட்டாள்கள் தினம்னு சொன்னதாக ஒரு சேதி இருக்கு! இன்னொரு கதையும் இருக்கு. கான்ஸ்டன்ட் காலத்தில் சில அறிவற்றவர்கள் மன்னனை ஆளும் திறன் இல்லாத முட்டாள்னு கிண்டல் பண்ண கடுப்பாகிப் போன மன்னர் அந்த முட்டாள்களில் ஒருத்தனை ஒரு நாள் மன்னனாக்கி அந்த நாளை முட்டாள்கள் நாள்னு அறிவிச்சார். அதான் இப்ப நாம்ப கொண்டாடுகிற முட்டாள்கள் தினம்னு ப்ரொபசர் ஜோசப் பாஸ்கின் என்பவர் சொல்றார். நம்ம டைரக்டர் ஷங்கர் ஒரு நாள் முதல்வர் கதையை இங்கிருந்துதான் சுட்டிருப்பாரோ? இன்னொரு கதையும் இருக்கு.1466-ல் பிலிப் மன்னனை அரசவை கோமாளிகள் ஒரு பந்தயத்தில் தோற்கடித்து விட்டார்களாம்.அந்த நாள்தான் ஏப்ரல் 1 என்கிறார்கள் .என்ன கதை போதுமா?" என்று சொல்லி முடித்தேன்.
எனக்கு வாக்களிங்க. என்னோட சின்னம் குரங்கு!
"

o

No comments:
Post a Comment