
புரட்சி கவிஞன்...அதிலும் உண்மையாகவே புரட்சி செய்தவன் சுப்பிரமணிய பாரதி.
அந்த அரிமாவை ஆலயத்து யானை தூக்கி எறிந்து பலி கொண்ட நாள்.!
எனக்கென்னவோ ....''பார்ப்பானை அய்யர் என்ற காலமும் போச்சே " என்று பாடியதற்காக சிலர் யானையின் வழியாக சதி செய்திருப்பார்களோ என்றே தோன்றுகிறது.
அமைச்சர்களும் சில அமைப்புகளும் மரபுக்காக உனது சிலைகளுக்கும் , படங்களுக்கும் பளபளப்புடன் வந்து மாலையை அணிவித்து மவுனம் காத்து விட்டு திரும்பிவிடுவர்.
ஆனால் காலத்தால் அழிக்கமுடியாத பாட்டு வரிகளை உனது அடிப்பொடி பாவேந்தன் பாரதிதாசன் பாடிவிட்டு மறைந்துவிட்டான்.
அதைவிட வேறு நினைவஞ்சலி எதுவுமில்லை. அவைகளுக்கு நிகராக இன்னும் எவனும் எழுதவில்லை.
அதையே உனக்கு காணிக்கை ஆக்குகிறேன்.
பாரதி...ஏற்றுக்கொள்!
"பைந்தமிழ்த் தேர்ப் பாகன் .அவனொரு
செந்தமிழ்த் தேனீ,சிந்துக்குத் தந்தை.!
குவிக்கும் கவிதைக் குயில்! இந்நாட்டினைக்
கவிழ்க்கும் பகையை கவிழ்க்கும் கவிமுரசு!
நீடு துயில் நீக்கப் பாடி வந்த நிலா!
காடு கமழும் கற்பூரச் சொற்கோ!
கற்பனை ஊற்றாம் கதையின் புதையல்!
திறம் பாட வந்த மறவன்.புதிய
அறம் பாட வந்த அறிஞன்.நாட்டிற்
படரும் சாதிப் படைக்கு மருந்து.!
மண்டும் மதங்கள் அண்டா நெருப்பவன்:
அயலார் எதிர்ப்புக் கணையா விளக்கவன்.
என்னென்று சொல்வேன்.என்னென்று சொல்வேன்!
தமிழால் , பாரதி தகுதி பெற்றதும்
தமிழ், பாரதியால் தகுதி பெற்றதும்
எவ்வாறென்பதை எடுத்துரைக்கின்றேன்!"
என அயலார் நடுங்க சொன்ன பாரதியே நீ வாழ்க.!
No comments:
Post a Comment