சித்தார்த் சொன்னதில் தவறு இருக்குமா?
டிவிட்டரில் இரு வரிகளில் மொத்தப் படத்தையும் சிலர் முடித்து வைத்து விடுகிறார்கள்..
அதைப்பற்றி விமர்சிப்பது குரங்கின் நோக்கம் இல்லை.
அப்படி டிவிட்டரில் பதியும் பலர் பத்திரிகைகளில் பணி புரிகிறவர்கள் இல்லை. ஆனாலும்அ வர்களுக்கு விமர்சிப்பதற்கு உரிமை இருக்கிறது.
இது ஜனநாயக நாடு. எழுத்துரிமை,பேச்சுரிமை எல்லாருக்கும் உண்டு. ஒருவரின் கருத்தை ஏற்பதும் மறுப்பதும் மக்களின் கையில்!
அதைப் போலவே தனது கருத்தை நடிகர் பதிவு செய்திருக்கிறார்.
"படத்தில் அரை மணி நேரம் ஓடி விட்டாலே கையில் இருக்கிற செல்போனில் மொக்கை என்பதாக டிவிட் பண்ணி விடுகிறார்கள்.படத்தில் ஒரு கண்ணும் ,செல்போனில் இன்னொரு கண்ணும் வைத்து யாரும் படமும் பார்க்க முடியாது.டிவிட் பண்ணவும் இயலாது. டிவிட் தட்டும் நேரத்தில் திரையில் எவ்வளவோ காட்சிகள் ஓடியிருக்கலாம். அத்தகைய நிலையில் ஒரு படத்தின் தலைவிதியை நிர்ணயிப்பது நியாயமா?" என கேட்டிருக்கிறார் நடிகர் சித்தார்த்.
"எத்தனை நடிகர்கள்,நடிகைகள், டெக்னிஷியன்கள் ,நிபுணர்கள் வருடக் கணக்கில் உழைத்து உருவாக்கிஇருக்கிறார்கள் அந்த படத்தை பத்து நிமிடமே பார்த்துவிட்டு மொத்த படத்தின் ரிசல்ட்டை எப்படி முன்னதாகவே கணிக்க முடியும்?"
கேட்டிருப்பவர் நடிகர் சித்தார்த்.
"முழுமையாக படத்தை பாருங்கள். பிறகு விமர்சியுங்கள்.அது நேர்மை! நல்லா இருக்கு. நல்லா இல்லை என முடிவை சொல்லுங்கள். அதை விடுத்து 'படத்தை பார்க்காதீர்கள் என மக்களிடம் சொல்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை " என்கிறார்.
பாவம் சித்தார்த்.! டிவிட்டரில் அப்படி எழுதுவதற்காக சிலருக்கு தயாரிப்பாளர்கள் சிலர் பல்லாயிரக்கணக்கில் பணம் கொடுப்பது தெரியவில்லை.
அவர்களை கண்டுபிடியுங்கள் சித்தார்த்!
இது அறிவியல் உலகம். எல்லாமே நடக்கும்! அதற்காக எல்லாவற்றையுமே டிவிட்டரில் பதிவிட முடியுமா?
படிப்பவர்களும் புத்திசாலியாகத்தானே இருக்கிறார்கள் ? இரண்டு வரியை பார்த்துவிட்டு முடிவெடுப்பார்கள் என நம்பலாமா?
இது இரண்டு தரப்பினரும் முடிவு செய்யவேண்டியது!
No comments:
Post a Comment