பண்ணையார்கள் மாதிரி அரசியல் கட்சித் தலைவர்கள்...
எவன் செத்தால் எனக்கென்ன என்று டாஸ்மாக்கிற்கு விலைபோன அடிமைத் தமிழர்கள்...
அறிக்கைகளில் குளிர் காயும் சந்தர்ப்பவாதிகள்....
இவர்களுக்கு மத்தியில் கூட்டறிக்கை விட்டு கையை கழுவிக்கொண்டு விட்ட திரையுலக சொந்தங்கள்....
இவர்களை விட எந்த வகையில் பாரதிராஜா உயர்ந்து நிற்கிறார்?
ஈழ சொந்தங்களை சிங்கள இனவெறி அரசு வேட்டையாடியபோது துணிந்து பத்ம விருதினை திருப்பியனுப்பிய இனமான தமிழன் பாரதிராஜா!
இதைவிட வேறு தகுதி என்ன வேண்டும்?
காங்கிரஸ் ஆட்சியின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படவேண்டும் என்பதற்காக வன்முறைக்கு பாஜக துணையாக கன்னடத்தில் இருக்கிறது.
அதனால் மத்தியில் ஆளும் பாஜக அரசு மவுனமாக இருக்கிறது.
பலியாவது அப்பாவி தமிழர்களே! உயிர் இழந்து ,சொத்துகள் இழந்து அகதிகளாக வாழ்கிறார்கள் !
அதைத்தான் பாரதிராஜா தனது அறிக்கையில் சொல்லி இருக்கிறார்.
"இன அழிப்பில் ஒன்னரை லட்சம் உறவுகளை இழந்து சொல்ல முடியாத சோகத்தில் இருந்தபோது மரம் வெட்ட வந்ததாக சொல்லி இருபது தமிழர்களை ஆந்திர அரசு சுட்டுக் கொன்றது. முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் அணை பிரச்னையில் தமிழர்களை தாக்குவது என்கிற நிலையில்......
உடமைகளுக்கும் உயிர்களுக்கும் உறுதி இல்லாத நிலையில் கர்நாடகத்தில் தமிழர்கள்!
நாங்கள் இந்த தேசத்தில்தான் இருக்கிறோமா?
கேள்வி எழுகிறது!
இந்திய அரசு இதுவரை தலையிடாதது பெரும் துயரம்.ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு இந்த தேசத்தில் உள்ள ஒவ்வொரு தேசிய இனமும் தனித்தனியாக ஆண்டதுபோல நாங்களும் ஏன் எங்களை ஆண்டு கொள்ளக் கூடாது என்கிற கேள்வியை எங்கள் இளைஞர்களின் மனதில் மத்திய அரசு புகுத்திவிடக்கூடாது!"
இதுதான் இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டிருக்கும் அறிக்கை.
No comments:
Post a Comment